நிகழ்வு-செய்தி

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் வாஹல்கட D2 கல்லூரி புனரமைக்கப்பட்டது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள வாஹல்கட D2 கல்லூரியை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் கடற்படையின் சமூக நல பங்களிப்புடன் இன்று (2025 பெப்ரவரி 22) இடம்பெற்றது.

22 Mar 2025

"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டம்

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வட மத்திய ஆகிய கடற்படை கட்டளைகளினால் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம் 2025 பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளும் கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டமொன்றை வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.

24 Feb 2025

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் கொடவேஹேர திகன்னேவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் கொட்டவெஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ, திகன்னேவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1082 வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

23 Feb 2025

தொடக்க தகவமைப்பு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 12 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றது

தொடக்க தகவமைப்பு பாடநெறி (மருத்துவம்) 03/2024, வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு (12) அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2025 பெப்ரவரி 22) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

22 Feb 2025

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் பண்டுவஸ்நுவர ஹல்மில்லவெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர மேற்கு பிராந்திய மத்திய பேரம்பொல ஹல்மில்லவெவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1081வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

22 Feb 2025

கடற்படைக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 16 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்

இலங்கை கடற்படைக்கு 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பதினாறு (16) அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2025 பெப்ரவரி 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி தலைமையில் இடம்பெற்றது.

21 Feb 2025

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய செயற்றிட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 1000 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மோதர ஆனந்த மத்திய மகா வித்தியாலயம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் திறப்பு விழா இன்று (2025 பெப்ரவரி 20) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.

20 Feb 2025

பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு ‍கல்லூரியின் 54வது பணியாளர் பாடநெறியில் பயிலும் அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வுப் பயணத்திற்காக கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்

2025 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு ‍கல்லூரியின் 54 ஆவது பணியாளர் பாடநெறியை பயிலும் 18 மாணவர் அதிகாரிகள் மற்றும் மூன்று (02) கல்வி ஊழியர்களைக் கொண்ட கொமடோர் Ahsen Ali Khan தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், அங்கு கொமடோர் Ahsen Ali Khan மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.

19 Feb 2025

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணிபுரியும் திருமதி ஜூலி (Julie Chung) இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார்.

19 Feb 2025

சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் நினைவு தின வீதி ஓட்டம் - 2025 ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் நடைபெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தினக் (Council International Military Sports-CISM) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்துவின் பங்குபற்றுதலுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தின கொண்டாட்ட வீதி ஓட்டம் - (2025 பெப்ரவரி 18) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாராளுமன்ற மைதானத்தில் இருந்து அக்குரேகொட முப்படைத் தலைமையகம் வரை நடைபெற்றது.

18 Feb 2025