கடற்படை தளபதி மஹா சங்கையருக்கான ஓய்வு மத்தியஸ்தனத்தை திறந்து வைத்தார் .
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள், மகுலுவை ஸ்ரீ புத்தசின்ஹாராமைய விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹா சங்கையருக்கான ஓய்வு மத்தியஸ்தனத்தை அவ்விஹாரையின் பிரதம மத குருவும் தென்னிலங்கை அதிகரனையின் பிரதி நாயக்க தேரருமான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கேரதேவள புன்னரதன தேரோ அவர்களின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 14ஆம் (2016) திகதியன்று திறந்து வைத்தார்.
கடற்படையின் தென்னிலங்கை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்ஹ உட்பட பெருந்தொகையான பக்தர்ளும் இப்புண்ணிய நிகழ்விள் கலந்துகொண்டனர். இவ்வோய்வு மத்தியஸ்தானம் அப்பகுதி மக்களினதும் நலன் விரும்பிகளினதும் நன்கொடைகலைக் கொண்டு நோய் நிவாரணத்தின் பின் ஓய்வு பெரும் புத்த பிக்குகளுக்காக நிர்மணிக்கபட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது .












