குருநாகல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரின் ஆதரவு
குருநாகல் மாவட்டத்தில் மாஸ்பொத பிரதேசத்தில் கடந்த (09) ஆம் திகதி காலை ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட குருநாகல், குடாகல்கமுவ மற்றும் பிபி லதனிய பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க இராணுவ கடற்படையிர் நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த அனார்த்ததுக்கு உடனடியாக பதில்லித்து இதுக்காக இரண்டு குழு அனுப்பிவைக்கப்பட்டது. குடாகல்கமுவ பகுதிக்கு ஒரு அதிகாரியுடன் 40 கடற்படையினர்களும் பிபிலதனிய பகுதிக்கு ஒரு அதிகாரியுடன் 25 கடற்படையினர்களும் அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் கடற்படையினர்களால் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றி பாதிப்புக்குள்ளன மக்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.








