கடற்படை நடவடிக்கைகளின் போது வடக்கு கடலில் 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது
வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித தாக்குதல் படகொன்றின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 09) அனலதீவுக்கு வடமேற்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த புகையிலை 06 பொதிகளாக உள்ளதுடன் இது இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றது. குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்க உள்ளது.
மேலும் கடந்த மார்ச் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 1377.15 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி இந்த ஆண்டுகுழ் மட்டும் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட புகையிலை 1906.15 கிலோ கிராம் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது. கடல் பயன்படுத்தி மேற்கொள்கின்ற கடத்தல் மோசடிகள் குறைக்க கடற்படை அடிக்கடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.





|