கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஏப்ரல் 03) நெடுந்தீவு, கோவேலி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 4.5 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் நெடுந்தீவு பகுதியில் வசிக்கின்ற 50 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் மற்றும் கடலாமை இறைச்சி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அழிந்து போகும் விலங்குவாக பெயரிடப்பட்ட கடலாமைகள் பாதுகாக்க இலங்கை கடற்படை முழு ஆதரவு வழங்கப்படுகின்றது. இந்த விலங்குகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும், இந்த விலங்குகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.


