140.760 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிப்பு
கடற்படையினரினால் மன்னார் கடலில் 2019 ஜூன் 05 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 140.760 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் டோலர் படகொன்று கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மன்னார் பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகமான படகொன்று கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் அப் படகு சோதிக்கும் போது குறித்த கேரள கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் கடற்படை சோதனை நடவடிக்கை காரனத்தினால் குறித்த கஞ்சா பொதி கைவிட்டு சந்தேகநபர்கள் தப்பி சென்றதாக சந்தேகப்படுகின்றது.
கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
| a