கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை றாகம வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனை, மினுவங்கொடை அடிப்படை மருத்துவமனை, புத்தளம் சஹிரா முஸ்லிம் கல்லூரி மற்றும் மருதானை, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள வங்கி வளாகங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க இந்த நிறுவனங்களின் அனைத்து தளங்களையும் முறையாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.