அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்
இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் பிரியந்த பெரேரா, தனது 37 வருட சேவையை நிறைவு செய்து இன்றுடன் (2024 31 டிசம்பர்) ஓய்வு பெற்றார்.
அதன்படி, வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவிடம் கடற்படைத் தளபதி பதவிப் பொறுப்புக்களை இன்று (2024 டிசம்பர் 31,) ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, கடற்படை மரபுப்படி அவருக்கு மரியதை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கடற்படை முகாமைத்துவ சபை மற்றும் புதிய கடற்படைத் தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகளால் பிரியாவிடை பெற்ற பின்னர், கடற்படைத் தலைமையகத்திலிருந்து கடற்படை வாகன அணிவகுப்பில் புறப்படும் போது, சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் வீதியின் இருபுரங்களிலும் நின்று கடற்படையின் பாரம்பரியம் படி அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..