நங்கூரம் கடற்படை நலன்புரி மையத்தில் போர்வீரர்களுக்காக நீர் சிகிச்சை தடாகம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டது
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பெளத்த சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தலைமையிலான குழு ஒன்று 2025 ஜனவரி 09 ஆம் திகதி வெலிசர “Anchorage” கடற்படை நலன் மையத்துக்கு விஜயம் செய்தது. அவர்கள், போரில் பாதிக்கபட்ட மற்றும் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்களின் நலனுக்காக நீர் சிகிச்சைக்கு ஏற்றதொரு தடாகம் கட்டுவதற்கான நிதி உதவியை வழங்கினர்
இது தொடர்பாக, தினேஷ் வீரக்கொடி தலைமையிலான யுத் பிரித்தானிய மற்றும் ஆஸ்திரேலிய குழுவினர், போரில் பாதிக்கப்பட்ட வீரர்களின் நலனுக்காக, ரூபாய் (02) இரண்டு மில்லியன் மதிப்புள்ள நிதி உதவியை இலங்கை கடற்படை நலனுக்கான பிரிவுக்கு வழங்கினர்.
மேலும், இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் முன்னாள் தலைவி மாலா லமாஹேவா, தங்களது கடமைகளின் போது காயமடைந்த அல்லது உயிரிழந்த கடற்படை வீரர்களின் இரண்டு குழந்தைகளுக்கு அவர்களது எதிர்கால கல்விக்காக மடிக்கணினிகளை அன்பளிப்பாக வழங்கினார்.இந்த நிகழ்வில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா (ஓய்வு), மேல் கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்டைத் தளபதியான ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கடற்படை தலைமையகத்துடன் இணைந்த பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.