கடற்படை தளபதி ஜெயஸ்ரீ மஹா போ சமிது மற்றும் ருவன்வெளி மகா சே ரதுன் வழிபட்டபார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், 2025 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அனுராதபுரம் அட்டமஸ்தானம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் சென்று கடற்படையின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இதற்கான கடற்படைச் சேவைகளுக்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களும் பங்குபற்றினார்

இதன்படி கடற்படைத் தளபதி முதலில் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போ சமிதுவில் பௌத்த வழிபாடுகளை மேற்கொண்டு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அட்டமஸ்தானாதிபதி கண்டி கலாவியின் பிரதம சங்கநாயக ஸ்ரஸ்த்ரபதி பல்லேகம சிரிசுமண ரதனபால ஹேமரதன நாயக்க தேரர் அவர்களை தரிசித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர், ரஜரட பல்கலைக்கழகத்தின் வேந்தர் ருவன்வெலி மஹா சா சைத்தியராமதிகாரி, ஷ்ரஸ்த்ரபதி பண்டித ஈத்தலவெடுனுவ, ஞானதிலக மகா நாயக்க தேரரை வழிபட்டு ஆசி பெற்றார்.

நாட்டின் பாதுகாப்பிற்கும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக சமய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் கடற்படையினர் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய அட்டமஸ்தானாதிபதி நாயக்க தேரர் உட்பட கௌரவ மகா சங்கரத்ன, கடற்படைத் தளபதியிடம் கடற்படையின் அந்த சேவையினை தொடர கோரிக்கை விடுத்த்துடன், அதற்காக ஜெயஸ்ரீ மஹாபோவின் ஆசீர்வாதத்தையும், இறையருளையும், கடற்படைத் தளபதி உட்பட அனைத்து கடற்படை வீரர்களும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என ஆசீர்வதித்தார்.

மேலும், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார மற்றும் கடற்படைத் தலைமையகம் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட கடற்படையினர் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.