"க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு

“வளமான நாடு - அழகான வாழ்வு” என்ற அரசாங்கத்தின் தூரநோக்கை நனவாக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், உயர் பருவ நெல் அறுவடையை சேமித்து வைப்பதற்காக அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமைந்துள்ள அரச நெல் களஞ்சியசாலைகளை கடற்படையினர் சுத்தப்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல், 2025 ஜனவரி 23 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய திட்டத்தில் இலங்கை கடற்படை முக்கிய பங்காளியாக கடமைபுறிகிறது. இதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், இந்த அரசாங்க நெல் களஞ்சியசாலைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ், கடற்படையினரால் நொச்சியாகம, தலாவ மற்றும் அல்கடவெளி ஆகிய அரசாங்க நெல் களஞ்சிய வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமைந்துள்ள 24 அரச நெல் களஞ்சியங்கள் இந்த சுத்தப்படுத்துதல் மற்றும் பழுதுபார்ப்புத் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.

மேலும், தேசிய பணிகளில் தேவையான ஆதரவை வழங்க இலங்கை கடற்படை தயாராக உள்ளது.