கடற்படையினர் திருகோணமலையில் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்

இலங்கை கடற்படையினர் திருகோணமலை நகர லயன்ஸ் கலகத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

இதன்படி, இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக, கிழக்கு கடற்படை கட்டளையில் கடமையாற்றும் கொமடோர் சுகாதார அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சியில் திருகோணமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.