கடற்படைத் தளபதி அமரபுர மஹா நிகாய மஹாநாயக தேரரைச் சந்தித்து கடற்படையின் எதிர்காலப் பணிகளுக்காக ஆசிர்வாதம் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள் 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த ஆலயத்தில் இலங்கை அமரபுர மஹா நிகயைவின் அதியுயர் மஹாநாயக கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மஹாநாயக்கரை தரிசனம் செய்து எதிர்காலப் பணிகளுக்கு ஆசிர்வாதம் பெற்றார்.

இதன்போது, கடற்படையின் எதிர்கால செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்குமாறும், கடற்படைத் தளபதி உட்பட முழு கடற்படையினருக்கும் ஆசீர்வாதங்களை வழங்குமாறும் பெருமானார் மஹாநாயக தேரர் அறிவுறுத்தினார்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களும் கலந்து கொண்டார்.