கடற்படைத் தளபதி மாண்புமிகு கர்தினால் அவர்களின் ஆசியைப் பெற்றார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட அவர்கள் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களின் கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இந்த சந்திப்பில், தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்தில் கடற்படையின் பங்களிப்பை பாராட்டிய பேராயர், கடற்படையின் எதிர்கால பணிகளை வெற்றிகரமாக முடிக்க கடற்படை தளபதி உட்பட முழு கடற்படையினருக்கும் ஆசிர்வாதம் வழங்கினார்.
மேலும், இச்சந்தர்ப்பத்தை நினைவுகூரும் வகையில், கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள விருந்தினர்களின் நினைவுப் புத்தகத்தில் கடற்படைத் தளபதி ஒரு குறிப்பை பதிவிட்டார்.