"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்தின் கீழ் கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு
க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தீவைச் சூழவுள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து 2025 பெப்ரவரி 15 ஆம் திகதி மற்றும் இன்று (2025 பெப்ரவரி 16) மேற்கு, தென் கிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரை சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்தல் போன்ற திட்டங்களுக்கு கடற்படை முழுமையான பங்களிப்பை வழங்கியது.
க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் முக்கிய பங்காளியாக, இலங்கை கடற்படை தீவின் அனைத்து கரையோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு பங்களிக்கின்றது.
அதன்படி, 2025 பெப்ரவரி 15 ஆம் திகதி அன்று, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் ரங்கல நிறுவனத்தினால் தியத உயன, தியவன்னா ஓயா மற்றும் கைவிடப்பட்ட பிரதேசங்களை இன்று (2025 பெப்ரவரி 16) தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தினால் பானம, ஆறுகம்பே, ஒகத, மருதமுனை, பெரியநிலவணை, கல்முனைக்குடி மற்றும் கல்முனை ஆகிய கடற்பரப்புகளில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு கடற்படையின் முழுமையான பங்களிப்பை கடற்படையினர் வழங்கினர்.
இதன்படி, இத்திட்டத்தின் மூலம் கடற்கரையில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக், பொலித்தீன், திண்மக் கழிவுகள் உள்ளிட்ட பெருந்தொகையான குப்பைகளை சேகரித்து கடற்கரையில் இருந்து அகற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.
மேலும், இன்று (2025 பெப்ரவரி 16) கிழக்கு கடற்படை கட்டளையானது தூய்மையான இலங்கை திட்டத்தின் சென்டிபே கடற்கரையை, இலங்கை கடற்படை கப்பல்களான விதுர மற்றும் பெரகும்பா ஆகிய நிறுவனங்களினால் கடற்கரையோரங்கள் சுத்திகரிக்கப்பட்டன.