கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் அனுராதபுரம் பரசங்கஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சிரச GAMMADDA சமூகப்பணி திட்டத்தின் அனுசரணையில், அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம மாகாண பிராந்திய செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பரசங்கஸ்வெவ நிக்ரோதாராம விகாரையில் நிறுவப்பட்ட 1080வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2025 பெப்ரவரி 16) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 10000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதுடன், இதன் மூலம் அனுராதபுரம், பரசங்கஸ்வெவ பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.

மேலும், சிரச GAMMADDA சமூகப்பணி திட்டத்தைச் சேர்ந்த குழு மற்றும் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.