“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய செயற்றிட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 1000 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மோதர ஆனந்த மத்திய மகா வித்தியாலயம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் திறப்பு விழா இன்று (2025 பெப்ரவரி 20) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கவும், இலங்கை கடற்படையானது இலங்கையை சமூக, சூழல் மற்றும் ஆன்மீக ரீதியில் மாற்றியமைக்கும் “க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய செயற்றிட்டத்தின் பிரதான பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றது.
அதன்படி, மகிழ்ச்சியான கல்லூரியின் கீழ், இன்று (2025 பெப்ரவரி 20) ஆரம்பிக்கப்பட்ட 200 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் மோதர ஆனந்த மத்திய மகா வித்தியாலயம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் திறப்பு விழாவில் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்.
இந்த வேளைத் திட்டத்தின் கீழ்; குறித்த கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் கட்டிடத்திற்கு வர்ணம் பூசுதல், ஆரம்பப் பிரிவின் வகுப்பறைகளில் மின் இணைப்புகளைச் சீர் செய்தல், விளையாட்டு மைதானத்தில் உள்ள கேட்போர் கூடம் பழுதுபார்த்தல், கல்லூரிக்குச் செல்லும் வீதியில் உள்ள சுவருக்கு வர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் இலங்கை கடற்படையினரின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நடைபெற உள்ளன.
மேலும், இந்த தொடக்க நிகழ்வுக்காக, “க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய செயற்றிட்டத்தின் செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.