தொடக்க தகவமைப்பு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 12 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றது
தொடக்க தகவமைப்பு பாடநெறி (மருத்துவம்) 03/2024, வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு (12) அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2025 பெப்ரவரி 22) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்படி, ஜெனரல் ஶ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 34 மற்றும் 35 ஆவது ஆட்சேர்ப்பில் மற்றும் 2022 நேரடி ஆட்சேர்ப்பு செய்து வெற்றிகரமாக பயிற்சியை முடித்த மருத்துவ பிரிவின் பன்னிரெண்டு (12) அதிகாரிகள் அவர்களது பெற்றோர்கள், ஆலோசகர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் கண்ணியமான முறையில் வெளியேறினர்.
அங்கு தொடக்க தகவமைப்பு பாடநெறியில் சிறந்த அதிகாரிக்கான வெற்றிக் விருதை செயல் துணை லெப்டினன்ட் (மருத்துவ) விமுக்தி விஜேசேகர வென்றார்.
அங்கு உரையாற்றிய கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி ரியர் அத்மிரால் ரொஹான் ஜோசப், வெளியேறும் அதிகாரிகளுக்கு முதலில் வாழ்த்துரை வழங்கினர். அங்கு மேலும் உரையாற்றிய அவர், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கான அர்ப்பணிப்பின் மூலமும் தொழில்சார் திறனை மேம்படுத்துவதன் மூலமும் எதிர்காலத்தில் கடற்படையின் பாத்திரத்தை திறமையாகவும் வினைத்திறனுடனும் செய்ய கடற்படை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட வேண்டுமென கடற்படை எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினார். மேலும், ரியல் அத்மிரால் ரொஹான் ஜோசப் அவர்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்காக தமது பிள்ளைகளை கடற்படையில் இணைந்து கொள்ள ஊக்குவித்த அவர்களின் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், கடற்படையின் இசைக்குழுவினரின் சிறப்பான கலைநிகழ்ச்சியுடன் இந்த வெளியேறல் அணிவகுப்பு வண்ணமயமாக இருந்ததுடன், கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் குழுவும் அணிவகுப்பு அதிகாரிகளின் பெற்றோர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.