கடற்படைத் தளபதி மற்றும் அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொட ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இன்று (2025 பெப்ரவரி 28,) உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கொழும்பு, எதுல்கோட்டையில் வைத்து அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் கான்சன பானகொட கடற்படையின் அட்மிரல் வசந்த கரண்ணாகொடவினால் பாராட்டப்பட்டதுடன், இலங்கை கடற்படையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கடற்படைத் தளபதி மற்றும் அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கர்ணாகொட ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.
மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியினால் அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கர்ணாகொட அவர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்த்துடன், அங்கு ‘அதிஸ்டானய ஹெரவும் லக்ஷ்ய’ என்ற நூலின் பிரதியும் அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவினால் கடற்படை தளபதிக்கு வழங்கிவைக்கப்பட்டது.