நிகழ்வு-செய்தி
உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் குடா ஓய, ஆனந்த புர பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
30 May 2020
பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு (02) கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டினர் மீன்டும் தாய் நாட்டுக்கு கொண்டு செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
29 May 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 09 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 09 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 28 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
29 May 2020
பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் நான்கு நபர்கள் (04) வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 04 நபர்கள் 2020 மே 28 ஆம் திகதி குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.
29 May 2020
பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகை மீட்க இலங்கை கடற்படையின் உதவி

காலி மீன்வளத் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற ‘தோனி’ என்ற பல நாள் மீன்பிடிப் படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் பாதிக்கபட்டதுடன் குறித்த படகு மற்றும் படகில் இருந்த 07 நபர்கள் பாதுகாப்பாக நிலத்திற்கு அழைத்து வர இன்று (2020 மே 29) இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
29 May 2020
வெளிநாட்டு கப்பல் குழுவினரை மாறிக்கொள்ள கடற்படையின் உதவி

சிறப்பு விமானமொன்று மூலம் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த வெளிநாட்டினர் காலி துறை முகத்தில் நங்கூரமிட்டுள்ள அவர்களின் நாடுகளுக்குரிய கப்பல்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் குறித்த கப்பல்களில் இருந்த வெளிநாட்டினர் பாதுகாப்பாக மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து செல்லவதுக்கும் 2020 மே 28 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
29 May 2020
கடற்படையினரால் முஹுது மஹா விஹாரயவில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் பொத்துவில் முஹுது மஹா விஹாரயவில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவால் 2020 மே 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
29 May 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 13 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 27 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
28 May 2020
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
28 May 2020
தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

திருகோணமலை கோவில்கொடிஇருப்பு மற்றும் கதிரவேலி பாலச்சேனை கடற்கரைகளில் 2020 மே 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மேற்கொண்டுள்ள இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கடற்கரைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத வலைகளை கடற்படை கைப்பற்றியது.
28 May 2020