நிகழ்வு-செய்தி

150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதியின் காசோலைகளை வழங்கும் நிகழ்வு குறித்த சிரேஷ்ட கடற்படை வீரர்கள் பணியாற்றும் நிருவனங்கள் மற்றும் கப்பல்கள் மையமாக கொண்டு இடம்பெற்றன. மேலும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விடுப்பில் இருக்கும் சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இந்த காசோலைகள் ஒப்படைக்கப்பட்டன. 2020 மே 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

14 May 2020

குணமடைந்த கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது

கடற்படையின் சிறப்பு படகுப் படை பிரிவின் கட்டளை அதிகாரியாக தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த லெப்டினன்ட் கமாண்டர் செட்ரிக் மார்ட்டின்ஸ்டீனை நினைவுகூருவதற்காக அவரது சகோதரர் தலைமையில் கற்பிட்டி பகுதியில் உள்ள ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி 2020 மே 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளுக்காக கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

14 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 59 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 59 கடற்படை வீரர்கள் 2020 மே 13 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

14 May 2020

சர்வதேச சிங்க சங்கம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு மூலம் பல சுகாதார உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் சர்வதேச சிங்க சங்கம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு மூலம் இன்று (2020 மே 13) கடற்படையிடம் வழங்கப்பட்டன.

13 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 223 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை வெற்றிகரமாக முடித்து, 58 குடும்பங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் 223 குடும்ப உறுப்பினர்கள் 2020 மே 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்.

13 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 10 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 கடற்படை வீரர்கள் மீது நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 12 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

13 May 2020

கடற்படையினரால் பல வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன

2020 மே 12 ஆம் திகதி சலாய் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல வெடிபொருட்கள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன.

13 May 2020

நீரில் மூழ்கிய நபரின் சடலத்தை கடற்படையினரால் மீட்பு

மொனராகலை, முத்துகண்டிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போன ஒருவரின் சடலத்தை 2020 மே 12 அன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

13 May 2020

சட்டவிரோத கஞ்சா தோட்டமொன்று கடற்படை உதவியுடன் சுற்றிவலைப்பு

கடற்படை மற்றும் அம்பலன்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 மே 12 ஆம் திகதி தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்று சுற்றிவலைக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஒரு சந்தேகநபரும் (01) கைது செய்யப்பட்டார்.

13 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 19 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 19 கடற்படை வீரர்கள் 2020 மே 11 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

12 May 2020