நிகழ்வு-செய்தி

வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்தனர்

2020 ஏப்ரல் 26 ஆம் திகதி அனுராதபுரம் மற்றும் அகலவத்த வைத்தியசாலைகளில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்டதுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து 2020 மே 04 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

06 May 2020

உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் (01) கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 மே 05 ஆம் திகதி தனமல்வில நகர பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியொன்று மூலம் உள்ளூர் கஞ்சா கொண்டு சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

06 May 2020

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

மன்னார் முலங்காவில் பகுதியில் 2020 மே 05 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

06 May 2020

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற மூன்று லாரிகளுடன் மூன்று நபர்கள் கடற்படையால் கைது

கின்னியா கங்கை பாலம் அருகே கடற்படை நடத்திய சாலைத் தடையில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற மூன்று லாரிகளையும், மூன்று நபர்களையும் 2020 மே 5 ஆம் திகதி கடற்படை கைது செய்துள்ளது.

06 May 2020

HHCO Industries (Pvt) Limited நிறுவனம் மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டம் கடற்படைக்கு முகமூடிகள் கொண்ட பாதுகாப்பு தலைக்கவசங்கள் நன்கொடையாக வழங்கியது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள் கொண்ட பாதுகாப்பு தலைக்கவசங்கள் இன்று (2020 மே 05) கடற்படை தலைமையகத்தில் வைத்து HHCO Industries (Pvt) Limited நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

05 May 2020

Southern Airduct (Pvt) Ltd நிறுவனம் மூலம் கடற்படைக்கு மின்விசிறிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

Southern Airduct (Pvt) Ltd நிறுவனம் 2020 மே 04 அன்று பல மின்விசிறிகள் நன்கொடையாக கடற்படைக்கு வழங்கியது.

05 May 2020

தனிமைப்படுத்தலை முடித்த 39 நபர்கள் பூஸ்ஸ மற்றும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ மற்றும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 39 நபர்கள் 2020 மே 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

05 May 2020

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 மே 04 அன்று ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 May 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த இரண்டாவது கடற்படை வீரர் முல்லேரியாவ வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி குறித்த கடற்படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் பின் அவர் குணமடைந்து 2020 மே 04 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

05 May 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருளுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், அலியவலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை கொண்ட ஒருவர் 2020 மே 03 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

04 May 2020