நிகழ்வு-செய்தி

கடற்படை தயாரித்த மேலும் ஒரு மெடி மேட் (Medi mate) இயந்திரம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது

இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட மற்றொரு மெடி மேட் (Medi mate) தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனம் இன்று (2020 ஏப்ரல் 27,) நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

27 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 05 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 05 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 27) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

27 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட வெலிசர கடற்படை தளத்தில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுகிறது.

வெலிசர கடற்படை வளாகத்தில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், தளத்தை முழுமையாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இப்போது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் முழு முகாம் வளாகத்தையும் கிருமி நீக்கம் செய்யவும் கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.

26 Apr 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி முலங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

26 Apr 2020

எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் 2020 ஏப்ரல் 25, அன்று காலமானார்.

26 Apr 2020

மான் இறைச்சி கொண்ட ஒரு நபர் (01) கைது செய்ய கடற்டை உதவி

கடற்படை மற்றும் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 ஏப்ரல் 24 ஆம் திகதி துனுக்காய், இலுப்பைகட்டவாய் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மான் இறைச்சி கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

25 Apr 2020

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கடற்படையால் முகமூடிகள் வழங்கப்பட்டன

அனுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களின் பயன்பாட்டிற்காக பல பாதுகாப்பு முகமூடிகள் 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி, கடற்படையால் வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

24 Apr 2020

சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் மக்கள் சீனக் குடியரசு மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் இன்று (2020 ஏப்ரல் 22) கடற்படை தலைமையகத்தில் வைத்து மக்கள் சீனக் குடியரசு மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

24 Apr 2020

ஊடக அறிக்கை

விடுமுறையில் இருந்தபோது பொலன்னறுவையைச் சேர்ந்த ஒரு கடற்படை வீரர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்த பின்னர், பாதிக்கப்பட்டவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்த வெளிசர கடற்படை தளத்தில் உள்ள ஏனைய கடற்படை வீரர்களுக்கும் தொற்று பரவியுள்ளது தொடர்பாக கண்டறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

24 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 03 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 03 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 24) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

24 Apr 2020