நிகழ்வு-செய்தி

ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மூன்று (03) நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்தது.

ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன் கடற்படை உடனடியாக 2020 ஏப்ரல் 18 அன்று அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

19 Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஆறு நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, மாலிகாவத்த மற்றும் புஞ்சி பொரெல்ல பகுதிகளில் வசிக்கும் ஆறு (06) நபர்களை இன்று (2020 ஏப்ரல் 16,) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

18 Apr 2020

அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற வேளாண் வேதிப்பொருட்களை கடற்படையால் கைப்பற்றப்பட்டது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி மெதவச்சி பூனேவ பகுதியில் உள்ள கடற்படை சாலைத் தடையில், வைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வேளாண் வேதிப்பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு லாரி வண்டியை கடற்படை கைப்பற்றியது.

18 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 09 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 18) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

18 Apr 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடல்பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 04 பேரை கடற்படை கைது செய்தது.

18 Apr 2020

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2020 ஏப்ரல் 17 ஆம் திகதி கல்முனை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

18 Apr 2020

போதைப் பொருள் கொண்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கடற்படை பொலிஸாருடன் புல்முடை யான் ஓய சாலைத் தடையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது கஞ்சா மற்றும் ஹெராயின் வைத்திருந்த 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்’பட்டனர்.

17 Apr 2020

கடற்படை வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது

கடற்படை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மையமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.

17 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி கொழும்பு கப்பல்துறை, கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயில்கள், வரகாபொல அடிப்படை வைத்தியசாலை மற்றும் புத்தலம் சஹிரா கல்லூரி ஆகிய இடங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

17 Apr 2020

அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் வைத்திருந்த ஒருவர் (01) கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கை கடற்படை மன்னார் உதவி மீன்வள அலுவலகத்துடன் இனைந்து மன்னார் கரிசல்பாடு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சங்குகளை வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.

17 Apr 2020