நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை, இராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து 2020 ஏப்ரல் 09, அன்று மன்னார், தாரபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 Apr 2020
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி மாபலகம பாலத்தில் சிக்கிய குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி மாபலகம பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் அகற்றப்பட்டது.
09 Apr 2020
சுய தனிமைப்படுத்தலை மீறிய ஜா-எல சுது வெல்ல பகுதியில் 28 பேர் கடற்படையால் கைது

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் இன்று (2020 ஏப்ரல் 09) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
09 Apr 2020
புதையல் தோண்டிய நபர்கள் கடற்படையால் கைது

புத்தளம், எதலை, எம்புகுடெல்ல பகுதியில் 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புதையல் தோண்டிய 06 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
09 Apr 2020
முல்லைதீவு வட்டுவாக்கல் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 04 பேர் கடற்படையினரால் கைது

ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ள போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன் மற்றும் காய்கறிகளை கொண்டு சென்ற இரண்டு கெப் வண்டிகளுடன் நான்கு நபர்களை (04) 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி முல்லைதீவு வட்டுவாக்கல் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைத் தடையில் கடமையில் இருந்த கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டது.
09 Apr 2020
சட்டவிரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி புத்தளம் நெலும்வெவ கல்லடி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபானங்கள் தயாரித்த இடமொன்று மற்றும் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய பல உபகரணங்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டது.
09 Apr 2020
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
09 Apr 2020
காலி மீன்வள துறைமுகத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

காலி மீன்வள துறைமுகத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த பல நாள் மீன்பிடிக் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
09 Apr 2020
கடற்படை மருத்துவமனைகளில் விசேட வைத்திய சிகிச்சைகள் நிறுத்தப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

கோவிட் 19 வைரஸின் பரவல் காரணத்தினால் இலங்கை கடற்படையின் விசேட வைத்திய சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, அதற்கு மாற்றாக, அத்தியாவசிய மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு மருத்துவர்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு சிறப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
08 Apr 2020
கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது

கொழும்பு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று இன்று 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.
08 Apr 2020