நிகழ்வு-செய்தி
கிழக்கு மாகாண தீயணைப்பு சேவைகள் 'முதல் திறன் பட்டை பரீட்சையின்' நடைமுறைத் தேர்வை நடத்துவதற்காக கடற்படையின் உதவி

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் இயங்கும் தீயணைப்பு சேவைகளின் 'முதல் திறன் பட்டை பரீட்சையின்' நடைமுறைத் தேர்வு 2024 ஆகஸ்ட் 20 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஆரம்பமானது, இதற்காக கடற்படை பொறியியல் திணைக்களத்தின் நிபுணத்துவ ஆதரவு வழங்கப்பட்டது.
21 Aug 2024
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS O'Kane' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS O'Kane' என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2024 ஆகஸ்ட் 21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
21 Aug 2024
கடற்படை கப்பல்துறையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ், கடற்படை கப்பல்துறையில், கடற்படை ஆயுதத் திணைக்கள ஜெட்டி வளாகத்தில் (CNAD Pier) நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு மையம் இன்று (2024 ஆகஸ்ட் 20,) கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
20 Aug 2024
இந்தோனேசிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இந்தோனேசிய குடியரசு தூதரகத்துடன் இணைக்கப்பட்டுள்ள, இலங்கையின் இந்தோனேசிய குடியரசு பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கொமடோர் Ardiansyah Muqsit இன்று (2024 ஆகஸ்ட் 20) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
20 Aug 2024
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Spruance’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது

2024 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி தனது விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Spruance’ கப்பல், அதன் விநியோகம் மற்றும் சேவைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (2024 ஆகஸ்ட் 20) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
20 Aug 2024
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எசல மஹா பெரஹெரவின் நீர் வெட்டு விழாவிற்கு கடற்படையின் பங்களிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நாங்கு பிரதான தேவாலயங்களில் எசல மகா பெரஹரவின் முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (2024 ஆகஸ்ட் 20) பேராதனை, கட்டம்பே பகுதியில் நடைபெற்ற நீர் வெட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படை பங்களித்தது.
20 Aug 2024
ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீர்ரொருவருக்கு சக்கர நாற்காலியொன்று மற்றும் ஊன்றுகோல்களை நன்கொடையாக வழங்கப்பட்டது

யுத்தத்தின் போது ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கே.எஸ்.பி. ரொட்ரிகோவுக்கு சக்கர நாற்காலி மற்றும் ஒரு ஜோடி ஊன்றுகோல் வழங்கும் நிகழ்வு இன்று (2024 ஆகஸ்ட் 20,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் நடைபெற்றது.
20 Aug 2024
கொமடோர் தனேஷ் பத்பேரிய கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கொமடோர் தனேஷ் பத்பேரிய இன்று (2024 ஆகஸ்ட் 20,) கடற்படை தலைமையகத்தில் உள்ள நிர்வாக பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
20 Aug 2024
கடற்படையினரின் பங்களிப்புடன் ஹிக்கடுவை மற்றும் தங்காலை கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று இன்று (2024 ஆகஸ்ட் 17) ஹிக்கடுவ கடற்கரை, தங்காலை துறைமுகம் மற்றும் அதனுடன் இணைந்த கடற்கரையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
17 Aug 2024
ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

37 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஆகஸ்ட் 16) ஓய்வு பெற்றார்.
16 Aug 2024