நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

38 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 செப்டம்பர் 01) ஓய்வு பெற்றார்.
01 Sep 2023
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற எசல மஹா பெரஹெரவின் நீர் வெட்டு விழாவிற்கு கடற்படையின் பங்களிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நாங்கு பிரதான தேவாலயங்களில் எசல மகா பெரஹராவின் முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (2023 ஆகஸ்ட் 31) பேராதனை, கட்டம்பே பகுதியில் நடைபெற்ற நீர் வெட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படை பங்களித்தது.
31 Aug 2023
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு கொழும்பு ரோயல் கல்லூரியினால் பாராட்டு

கொழும்பு றோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று (2023 ஆகஸ்ட் 31) கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
31 Aug 2023
ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் (Chrish Van Hollen) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (2023 ஆகஸ்ட் 30) இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹுவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்ததுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங் (Juli Chung ) அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
30 Aug 2023
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பணியாளர் பாடநெறியை பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று (2023 ஆகஸ்ட் 28) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.
28 Aug 2023
அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற 53 வது அடிப்படை பாராசூட் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த இலங்கை கடற்படையின் ஒரு அதிகாரி (01) மற்றும் ஐந்து மாலுமிகள் (05) 2023 ஆகஸ்ட் 24 ஆம் திகதி நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
25 Aug 2023
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்ற எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) இன்று (2023 ஆகஸ்ட் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
23 Aug 2023
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள கேர்ணல் முஹம்மட் பாரூக் (Colonel Muhammad Farooq) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 ஆகஸ்ட் 22) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
22 Aug 2023
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ.நா அலுவலகத்தால் நடத்தப்பட்ட பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர ரோந்து படகுகள் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தில் உலகளாவிய கடல்சார் குற்றவியல் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் நடத்தப்பட்ட கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்த பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடற்கரை ரோந்து கப்பல் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் திருமதி Siri Bjune மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் தளபதி கொமடோர் புத்திக லியனகமகே ஆகியோர் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2023 ஆகஸ்ட் 18 ஆம் திகதி குறித்த பீடத்தில் நடைபெற்றது.
21 Aug 2023
திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவை பார்வையிட கடற்படை மீண்டும் கப்பல் சேவைகள் ஆரம்பித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக கடற்படை மூலம் ஆரம்பிக்கப்பட்ட திருகோணமலை துறைமுகத்தில் உள்பகுதி மற்றும் நிலாவெளி புறா தீவு பார்வையிடும் சுற்றுலா கப்பல் சேவைகள் 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது.
20 Aug 2023