நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் நிஷாந்த அமரோசா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் நிஷாந்த அமரோசா தனது புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கைக்கு இன்று (2023 ஜூலை 23) விடைபெற்றார்.
23 Jul 2023
சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்துடன் இணைந்து கடற்படையால் சதுப்புநில நடவு திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

ஜூலை 26 ஆம் திகதி ஈடுபட்ட சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து, 2023 ஜூலை 14 மற்றும் 21 ஆம் திகதிகளில் கல்பிட்டி கப்பலாடி பிரதேசத்திலும் மல்வத்துஓய முகத்துவாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சதுப்புநில மர நடுகைத் திட்டமொன்றை கடற்படையினர் மேற்கொன்டனர்
23 Jul 2023
பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சயொன்று கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது

வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள பிள்ளைகளின் தலைமைத்துவ திறமையை வளர்க்கும் வகையில் இலங்கை கடற்படையினர் நடத்தும் தலைமைத்துவ பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் முதற்கட்டமாக கொழும்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றி ஐம்பத்தெட்டு (158) பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று இன்று (2023 ஜூலை 21) கடற்படை தலைமையகம், கொழும்பு துறைமுகம் மற்றும் வெலிசர கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.
21 Jul 2023
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'SAMIDARE (DD-106) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'SAMIDARE (DD-106) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (ஜூலை 20, 2023) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுப்படி வரவேற்றனர்.
20 Jul 2023
கொமடோர் சந்திம சில்வா கடற்படை வெளியீட்டு கட்டளையின் செயல் கொடி அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

கொமடோர் சந்திம சில்வா 2023 ஜூலை 19 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கடற்படை வெளியீட்டு கட்டளையின் செயல் கொடி அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
20 Jul 2023
கடற்படை வெடிகுண்டு செயலற்ற தகுதிப் பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்தது

மஹவ, இலங்கை கடற்படை வெடிகுண்டு செயலிழப்பு பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற வெடிகுண்டு செயலிழப்பு தகுதி பாடநெறிக்கான முத்திரை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 2023 ஜூலை 18 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.
19 Jul 2023
இலங்கை வைத்தியசாலை சேவைச் சபையின் தலைமையில், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

இலங்கை வைத்தியசாலை சேவைச் சபையின் கௌரவப் பணிப்பாளர் ராஜகீய பண்டித ரஜவெல்லே சுபூதி தேரர் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பணித் திட்டத்தின் கீழ், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை உட்பட அரச வைத்தியசாலைகளுக்கான வைத்தியசாலை உபகரணங்களை அடையாளமாக விநியோகிக்கும் நிகழ்வு 2023 ஜூலை 17 ஆம் திகதி வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.
18 Jul 2023
புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை விமானப்படையின் 19வது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று (2023 ஜூலை 13) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
13 Jul 2023
உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றும் Vinod Kurain Jacob அவர்கள் இன்று (2023 ஜூலை 12) உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
12 Jul 2023
மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது

குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு (International Organization for Migration - IOM), தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (National Anti- Human Trafficking Task Force – NAHTTF) உடன் இணைந்து மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து நடத்தப்பட்ட இராணுவ வீரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2023 ஜூலை 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
06 Jul 2023