நிகழ்வு-செய்தி
அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட முதலாவது, அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா இன்று (03) கடற்படை தலையமையகத்தில் நடாத்தப்பட்டது.
03 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முல்லைதீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்களினால் கொக்குதுடுவை கடலில் தனியிலை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் இன்று ( ஆகஸ்ட் 02) கைதுசெய்யப்பட்டனர்.
02 Aug 2016
யுத்தத்தில் காயமடைந்த கடற்படை வீரர்களுக்கான விடுமுறை விடுதி தியத்தலாவையில் திறந்துவைப்பு

நாட்டிற்காக யுத்தம் செய்து காயமடைந்த கடற்படை வீரர்களுக்காக இரண்டு விடுமுறை விடுதிகளை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் தியத்தலாவையில் வைத்து சனிக்கிழமை (யூலை 30) திறந்து வைக்கப்பட்டது.
01 Aug 2016
பதினேழு அதிகாரிகள் கடல் மற்றும் கடல்சார் அகாடமியில் ஆணையளிப்பு பெற்றனர்

பயிற்சி முடித்த, 2016 ன் முதலாம் பெண் அதிகாரி ஆட்சேர்ப்பின் பன்னிரண்டு அதிகாரிகள் மற்றும் ஐந்து சேவை ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் இன்று (30) நடந்த ஆணையளிப்பு விழாவின் போது புதிதாக ஆணை பெற்றனர்.
30 Jul 2016
கடற்படையினரால் 8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனி கடற்படை பிரிவின் வீரர்களால் 8 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இருவரர் இயக்கச்சி பிரதேசத்தில் வைத்து நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.
30 Jul 2016
கடற்படை தளபதியினால் தலாவையில் நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் திறந்து வைப்பு

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை, மேற்கொள்ளும் சமூகசேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக தலாவை மகா வித்தியாலத்தில் நிறுவிய “ரிவேர்ஸ் ஒச்மொசிஸ்” நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் இன்று (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
29 Jul 2016
விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி

விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள், தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படை நேற்று (28) உதவியளித்தது.
28 Jul 2016
“ஜகோர் பெலசோ” ரஷ்ய போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஆகியோர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

“ஜகோர் பெலசோ” ரஷ்ய போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அலெக்சி ஏ நெகுடோசி மற்றும் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கெப்டன் மெக்சிம் எஸ் அலலிகின் ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரதன் அவர்களை இன்று (27) சந்தித்தனர்
27 Jul 2016
9.3 கிலோ கேரளா கஞ்சா மற்றும் அதனை வைத்திருந்த நான்கு பேரைக் கைது செய்ய கடற்படையினர் உதவி

மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து 9.3 கிலோ கிராம் கேரளா கஞ்சாப் பொதிகள் மற்றும் அதனை வைத்திருந்த நான்கு பேர் ஆகியோரைக் கைது செய்ய கடற்படையினர் உதவி செய்தனர்.
27 Jul 2016
“ஜகோர் பெலசோ” எனும் ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ரஷ்ய தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கான “ஜகோர் பெலசோ” எனும் போர்க்கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று (27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டன.
27 Jul 2016