நிகழ்வு-செய்தி
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படை ஆதரவு

யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் தொடங்கினர். அதன்படி, குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓய வரையிலான பகுதியில் செல்லும் யாத்திரிகர்களின் தேவைகள் குறித்து கடற்படையினர் உதவி வழங்கினர். இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பக்தர்களின் வசதிக்காக கடற்படையால் வழங்கப்படும் சேவைகளை பார்வையிட்டதுடன், ஜூன் 15 ஆம் திகதி கதிர்காமம் செல்லும் பாத யாத்திரையில் இணைந்தார்.
19 Jun 2023
கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் புதிய தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா (ஓய்வு) இன்று (2023 ஜூன் 19) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
19 Jun 2023
வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட பதவியேற்பு

ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக 2023 ஜூன் 19 ஆம் திகதி கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
19 Jun 2023
இந்திய கடற்படையின் ‘INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
19 Jun 2023
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
18 Jun 2023
251 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 330 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 251 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் இருநூற்று எழுபத்தெட்டு (278) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் ஐம்பத்திரண்டு (52) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 ஜூன் 17 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
18 Jun 2023
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன பதவியேற்பு

ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக 2023 ஜூன் 16 அன்று கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
17 Jun 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைக்காக கடற்படையின் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் வசதிகள் திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர், அங்கு பயணிகள் முனையம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான வசதிகள் திறந்து வைப்பு இன்று (2023 ஜூன் 16) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் கௌரவ. நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
16 Jun 2023
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை ஆதரவு

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில் பெருந்திரளான கிறிஸ்தவ பக்தர்களின் பங்குபற்றுதலுடன் 2023 ஜூன் 13 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.
14 Jun 2023
ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடி கப்பலில் இருந்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட கடற்படையினருக்கு பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன

இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு சுழியோடி நடவடிக்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. மேலும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜூன் 12) கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.
13 Jun 2023