நிகழ்வு-செய்தி

வெற்றிகரமான கூட்டு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு ‘INS Sukanya’ கப்பல் இலங்கை விட்டுச் சென்றது

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 பிப்ரவரி 27 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, இன்று (2023 மார்ச் 01) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவுடன் நடைபெற்ற கூட்டு கடற்படை பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டுச் செல்கிறது. மேலும் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலுக்கு வழக்கமான பிரியாவிடை வழங்கப்பட்டது.

02 Mar 2023

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினார்

28 Feb 2023

கடற்படை மரைன் படையணி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 13 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை மரைன் படையணி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த இந்த படையணியின் எட்டாவது (08) ஆட்சேர்ப்பில் சேர்ந்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் ஒன்பது (09) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ரொஹான் திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி கடற்படை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் 2023 பெப்ரவரி 27 ஆம் திகதி திருகோணமலை சம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.

28 Feb 2023

இந்திய கடற்படையின் ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2023 பிப்ரவரி 27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

27 Feb 2023

கடற்படையின் செயற்பாட்டுத் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்குதுறை மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கடற்படையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் வடமத்திய கடற்படைக் கட்டளையின் மன்னார் வெடித்தலதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்குதுறை இன்று (2023 பிப்ரவரி 26,) வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

26 Feb 2023

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி (Admiral Muhammad Amjad Khan Niazi) இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசி இன்று (2023 பிப்ரவரி 25,) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

25 Feb 2023

கடற்படை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இலங்கை கடற்படையின் செயற்பாடுகளுக்காக Ideal Motors நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட 03 விசேட மாதிரிக் வாகனங்கள் (All-Terrain Vehicles - ATV) நிறுவனத்தின் தலைவர் திரு.நளீன் வெல்கமவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் 2023 பெப்ரவரி 22 கையளிக்கப்பட்டது.

23 Feb 2023

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Raden Eddy Martadinata - 331’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI Raden Eddy Martadinata - 331' என்ற கடற்படை கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Captain Nopriadi தலைமையில் வருகைதந்த குறித்த கப்பலானது கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.

21 Feb 2023

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (2023 பிப்ரவரி 08,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

08 Feb 2023

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ என்ற போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ என்ற போர்க்கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று காலை (2023 பிப்ரவரி 05) தீவை விட்டு புறப்பட்டது.

05 Feb 2023