நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) அவர்கள் இன்று (2023 ஜனவரி 05) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

05 Jan 2023

கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க 2022 டிசம்பர் 23 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜனவரி 03) அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

03 Jan 2023

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (2023 ஜனவரி 02) கட்டளைத் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

02 Jan 2023

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (2023 ஜனவரி 01) இலங்கை இராணுவம் மூலம் இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

01 Jan 2023

கடற்படைத் தளபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதிய எதிர்பார்ப்புகளுடன் 2023 ஆம் ஆண்டுக்கு காலடி வைத்த கடற்படை மற்றும் சிவில் ஊழியர்களுக்கும், உங்கள் குடும்பங்களின் அனைவருக்கும் கடற்படைத் தளபதி என்ற முறையில் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

01 Jan 2023

புதிய கடற்படை தளபதி விமானப் படை தளபதியுடன் சந்திப்பு

அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2022 டிசெம்பர் 28) விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை சந்தித்தார்.

29 Dec 2022

புதிய கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2022 டிசெம்பர் 28) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

29 Dec 2022

ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா இன்று (2022 டிசம்பர் 23) ஓய்வு பெற்றார்.

23 Dec 2022

ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற நத்தார் கரோல் பாடல் நிகழ்வு வண்ணமாக்க கடற்படையினரின் பங்களிப்பு

இலங்கை சுற்றுலா அமைச்சு, முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் கரோல் பாடல் நிகழ்வு 2022 டிசம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக ஆரம்பமானதுடன் கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார நடனக் குழு 2022 டிசம்பர் 21 அன்று மாலை தனது பங்களிப்பை வழங்கியது.

23 Dec 2022

Combat ’ 2022 கண்காட்சியுடன் கடற்படை இணைகிறது

பாடசாலை மாணவர்களிடையே சாரணர் இயக்கத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் கொழும்பு றோயல் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட Combat ’ 2022 கண்காட்சி 2022 டிசம்பர் 20 ஆம் திகதி குறித்த கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு கடற்படையினரால் வழங்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் கடற்படையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் கடற்படை வீரர்களால் வழங்கப்பட்ட செயல்விளக்கங்கள் இடம்பெற்றன.

21 Dec 2022