நிகழ்வு-செய்தி

246 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 334 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 246 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 334 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 செப்டம்பர் 06 ஆம் திகதி காலி பூஸ்ஸவிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

07 Sep 2022

இலங்கை கடற்படையில் புதிதாக இணைந்த P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.

அமெரிக்கா கடலோரக் காவல்படையினரால் இலங்கை கடற்படையிடம் 2021 ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து அதன் புதிய இல்லமான கொழும்பு துறைமுகத்தை நோக்கி 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி பயணம் தொடங்கியது.

05 Sep 2022

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பூஜை மற்றும் ஊர்வல திருவிழா பிரமாண்டமாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் வருடாந்த விநாயகர் பூஜை மற்றும் ஊர்வல திருவிழா 2022 செப்டம்பர் 01 ஆம் திகதி நடைபெற்றது. இதற்காக கடற்படை முகாம் வளாகத்தில் விநாயகர் சிலை தாங்கிய அழகிய ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

03 Sep 2022

இலங்கையின் புதிய மாலைதீவுக் குடியரசு பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்கள்

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமிர் (Lieutenant Colonel Hassan Amir) மற்றும் தற்போது அந்த பதவியில் கடமையாற்றும் கர்னல் இஸ்மயில் நசீர் (Colonel Ismail Naseer) மற்றும் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (02 செப்டம்பர் 2022) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது, அங்கு கடற்படைத் தளபதி லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமீர்வை அன்புடன் வரவேற்றார்.

02 Sep 2022

245 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 478 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 245 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 478 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஜூலை 30 ஆம் திகதி பூனாவை இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

31 Jul 2022

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படை உதவி

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு குமண தேசிய பூங்கா நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பகுதியில் தேவையான வசதிகளை இவ்வருடம் கடற்படையால் வழங்கப்பட்டு வருகிறது.

31 Jul 2022

பலுகஸ்வெவ மைத்திரிகம பகுதியில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக அனுராதபுரம், பலுகஸ்வெவ, மைத்திரிகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜூலை 24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

25 Jul 2022

திருகோணமலை போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு பாதுகாப்பு செயலாளர் அஞ்சலி செலுத்தினார்

திருகோணமலை கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுத் தூபிக்கு முன்பாக போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று காலை (2022 ஜூலை 23) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றதுடன் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் போர்வீரர் நினைவுத்தூபிக்கு மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

23 Jul 2022

வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்தி செய்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றும் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் பயிற்சி பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது (தொழில்நுட்ப) மற்றும் 36வது ஆட்சேர்ப்பின் சேர்ந்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு 2022 ஜூலை 22 ஆம் திகதி திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

23 Jul 2022

இலங்கையின் புதிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்கள்

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி சி. நெல்சன் (Lieutenant Colonel Anthony C. Nelson), மற்றும் தற்போது குறித்த பதவியில் பணியாற்றி வருகின்ற லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் (Lieutenant Colonel Travis Cox) ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 ஜூலை 07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். அங்கு லெப்டினன்ட் கர்னல் அந்தோனி சி. நெல்சன் அவர்களை அன்புடன் கடற்படைத் தளபதி வரவேற்றார்.

19 Jul 2022