நிகழ்வு-செய்தி

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் பத்தாவது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் (Bi- Annual Navy Journal) பத்தாவது பதிப்பு இன்று (2022 ஜூலை 15) கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தளபதி கேப்டன் அருன விஜயவர்தனவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

15 Jul 2022

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் இன்று (2022 ஜூலை 12) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

12 Jul 2022

கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கு இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் நியமனக் கடிதத்தை கையளிக்கப்பட்டது.

12 Jul 2022

கடற்படையின் புதிய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

12 Jul 2022

ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2022 ஜூலை 09) ஓய்வு பெற்றார்.

09 Jul 2022

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் திருமதி டான்யா கொங்கிரிப் அவர்கள் (Mrs. Tanja Gonggrijp) இன்று (2022 ஜூலை 08) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

08 Jul 2022

தனது பதவிக்காலம் நிறைவடைந்து வெளியேறவுள்ள இலங்கையின் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

.தனது பதவிக்காலம் நிறைவடைந்து வெளியேறவுள்ள இலங்கையின் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் கரு புகோரா (Captain Gaku FUKAURA) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 ஜூலை 07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

07 Jul 2022

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, இன்று (2022 ஜூன் 29,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவைச் சந்தித்தார்.

29 Jun 2022

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக குமார கடமைகளை பொறுப்பேற்றார்.

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக குமார இன்று (2022 ஜூன் 27,) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

27 Jun 2022

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும இன்று (2022 ஜூன் 24) கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

24 Jun 2022