2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 28158 மில்லியன் ரூபாவிற்கு மேல் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைமருந்துகள் இலங்கை கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இந் நாட்டின் சட்ட அமுலாக்க முகவர் மற்றும் பிராந்திய கடல்சார் பங்குதாரர்களுடன் இணைந்து கடந்த (2024) ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் போதைமருந்து கடத்தல், சட்டவிரோத பொருட்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 407 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுடன், ரூ.28,158 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் மற்றும் போதைமருந்துகள் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த பெரிய அளவிலான பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றபட்டது.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், இலங்கை சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதி உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் மதுவரித் திணைக்களம் உள்ளிட்ட சட்ட அமுலாக்க முகவர்களுடனான விசேட கூட்டு புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் இந்திய கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்புப்படையுடன் இணைந்து,
2024 ஆம் ஆண்டில், சுமார் ரூ.15554 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் 622 கிலோவிற்கு அதிகமான தொகையும், ரூ.11508 மில்லியனுக்கு மேல் பெறுமதியான கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) 1211 கிலோவுக்கு மேலான தொகையும், ரூ.700 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பு கொண்ட கேரள கஞ்சா 1752 கிலோவுக்கும் அதிகமான தொகையும், ரூ.23 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான உள்நாட்டு கஞ்சா 119 கிலோவுக்கு அதிகமான தொகையும் ரூ 373 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான 1,179,746 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து 107,626 உள்ளூர் கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்துள்ளனர். அத்துடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 230 சந்தேகநபர்கள் மற்றும் 21 உள்ளூர் மீன்பிடி கப்பல்கள் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளின் மொத்த சந்தை பெறுமதி 28158 மில்லியன் ரூபாவாவிற்கும் மேலாகும்.
அத்துடன், கடந்த வருடம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக விற்பனைக்கு தயாராக இருந்த 226 மதுபான போத்தல்களுடன் 02 சந்தேகநபர்களும், 234670 சட்டவிரோத சிகரெட்டுகளும், 972 போதை உருண்டைகளுடன் 52 சந்தேகநபர்களும், கஜமுது என அழைக்கப்படும் 11 இரத்தினக்கற்களும், சட்டவிரோதமாக வெளிநாட்டு விற்பனைக்கு தயாராக இருந்த 04 கிலோவிற்கு மேற்பட்ட தங்கத்துடன் 14 சந்தேக நபர்களும், நாட்டின் கடற்பகுதியில் வன விலங்குகளை கடத்திச் சென்ற (01) கப்பலுடன் 05 நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில், சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 65687 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள், 7272 கிலோவிற்கும் அதிகமான உலர் மஞ்சள், 368 கிலோவிற்கும் அதிகமான இஞ்சி, 8330 விவசாய இரசாயன திரவப் போத்தல்கள் மற்றும் 56786 பொதிகள், 727 அழகுசாதனப் பொருட்களுடன் இலங்கையைச் சேர்ந்த 81 சந்தேக நபர்கள் மற்றும் 03 இந்தியப் பிரஜைகளுடன் ஒரு இந்திய டக் கப்பலும் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தலை எதிர்த்து கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு இடம்பெயர்ந்து செல்ல முயன்ற 20 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டது.
மேலும், "க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாட்டின் பெருங்கடல்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல், கடல் பாதுகாப்பை ஏற்படுத்துதல், கடற்பரப்பில் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான நிலையான கடல் வலயத்தை பேணுவதற்காக 2025 ஆம் ஆண்டில் ஒரு புதிய மூலோபாய திட்டத்துடன் இலங்கை கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றனர்.