மஹகநதராவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

தீவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தாங்கல மற்றும் மஹகநதராவ அலுத்பாரகம பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மூன்று (03) கடற்படை பேரிடர் நிவாரண குழுக்கள் நிறுத்தப்படுவதாகவும், தற்போது அந்த நிவாரண குழுக்கள் புத்தாங்கல மற்றும் மககநதராவ அலுத்பாரகம பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

அதன்படி, பதவிய, புத்தாங்கல மற்றும் மககநதராவ அலுத்பாரகம பகுதிகளுக்கு கடற்படையின் பேரிடர் நிவாரண குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டிங்கி படகுகள் மூலமாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதுடன், புத்தாங்கல வாவி நிரம்பி வழிந்ததனால் வெள்ளத்தில் சிக்கிய பேருந்திலிருந்து பாடசாலை மாணவர்களை இன்று (2025 ஜனவரி 23) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கடற்படை தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதுவரை, பள்ளி மாணவர்களுடன் சேர்த்து 1,988 பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயண வசதிகளை வழங்கும் பணியை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், தீவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக உருவாகக்கூடிய வெள்ள அபாயம் காரணமாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவாக வழங்க ஆறு (15) கூடுதல் கடற்படை நிவாரண குழுக்களை அவசியமான இடங்களில் அமைக்க தயார் நிலையில் வைத்துள்ளது.