புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
இலங்கை கடற்படை, புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுடன் இணைந்து இன்று (2025 ஜனவரி 25) அதிகாலை புத்தளம் சின்னப்பாடு கொட்டன்தீவு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒன்றிணைந்த சோதனை நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா 2 கிலோ 245 கிராம் அளவிலான தொகையுடன் ஒரு பெண் சந்தேகநபரை கைது செய்தனர்.
இதற்கமைய, வடமேல் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிறுவனமும் புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவும் இணைந்து, இன்று (2025 ஜனவரி 25) மன்னார் புத்தளம் சின்னப்பாடு கொட்டன்தீவு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை பரிசோதித்தனர். அப்போது, அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா 2 கிலோ 245 கிராம் அளவிலான தொகையுடன் ஒரு பெண் சந்தேகநபரை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 கிலோ 245 கிராம் தொகையின் சந்தை மதிப்பு சுமார் 8 இலட்ச ரூபாவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர், 27 வயதான சின்னப்பாடு கொட்டன்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார். சந்தேகநபரும் கேரள கஞ்சா தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.