யாழ்ப்பான நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் இடையே செயலற்ற நிலையில் இருந்த ஒரு படகை பாதுகாப்பாக தரையிறக்க கடற்படையின் உதவி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு விஜயம் செய்யச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாத் தம்பதியரை நெடுந்தீவிற்கும் குறிகட்டுவானுக்கு இடைப்பட்ட கடலில் எரிபொருள் பற்றாக்குறையால் செயலற்று மிதந்து கொண்டிருந்த போது தேவையான உதவிகளை செய்த பின் கடற்படையினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

நெடுந்தீவை பார்வையிட வந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இழுவைப்படகு, 2025 பெப்ரவரி 09 ஆம் திகதி மாலை, நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுக நிலையத்திற்கு பயணித்த போது, செயலிழந்து கடலில் மிதந்து கொண்டிருந்ததை, நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனம் அவதானித்தது.

இதன்படி, வசப நிறுவனத்திற்கு சொந்தமான பி239 கரையோர ரோந்து கப்பலைப் பயன்படுத்தி இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையின் போது, எரிபொருள் பற்றாக்குறையால் இழுவை படகு மிதந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பின்னர், கப்பலை இயக்கத் தேவையான ஆதரவை வழங்கியதையடுத்து, கடற்படையினர் சுற்றுலாத் தம்பதிகளுடன் படகை பாதுகாப்பாக குறிகட்டுவான் துறைமுக நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

மேலும், நாட்டின் கடல் பிராந்தியத்தில் அனர்த்தத்தை எதிர்நோக்கும் கடற்றொழில் மற்றும் கடற்தொழிலாளர் சமூகத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு கடற்படை தொடர்ந்தும் தயாராக உள்ளது.