சுமார் 56 மில்லியன் ரூபா பெறுமதியான 140 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா வட கடலில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2025 பெப்ரவரி 17) அதிகாலை யாழ்ப்பாணம் கல்முனை முனையின் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த 140 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கடற்படையினரால், யாழ்ப்பாணம் கல்முனை முனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நான்கு (04) பொதிகள் மிதந்து வந்ததை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு, அந்த பொதியில் அடைக்கப்பட்டிருந்த 140 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்த கேரள கஞ்சாவை தரையிறக்க முடியாமல் கடத்தல்காரர்கள் கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுவதுடன், மேலும் கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ஐம்பத்தாறு (56) மில்லியன் ரூபாய்கள் என நம்பப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.