கடற்படையினரால் இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் சிலாவத்துறை, வில்பத்து, திருகோணமலை கொட்பே மற்றும் மோதர கிபுலா கால்வாய், கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, இருபது (20) கிராம் கேரள கஞ்சா, ஆயிரத்து ஐம்பது (1050) மில்லிகிராம் மாவா போதைப்பொருள் மற்றும் இருபத்தி ஆறு (26) கிராம் ஐஸ் போதைப்பொருள் முந்நூற்று நாற்பத்தாறு (376) மில்லிகிராம்களுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் கைது செய்தனர்.
இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர், சிலாவத்துறை பொலிஸாருடன் இணைந்து சிலாவத்துறை மரிச்சிகட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று (01) 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி சுமார் இருபது கிராம் கேரளா கஞ்சாவுடன் (20) கைது செய்யப்பட்டதுடன், 2025 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் சிலாவத்துறை பொலிஸாருடன் இணைந்து வில்பத்துவ கல்ஆறு வீதித்தடையில் சோதனை நடத்தி ஆயிரத்து ஐம்பது (1050) மில்லிகிராம் மாவா போதைப்பொருளை கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவரை (01) கைது செய்தனர்.
மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் கடற்படையினர், மோதர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி மோதர, கிபுலா கால்வாய் பகுதியில் நடத்திய விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில் சுமார் இருநூற்று நாற்பத்தாறு (246) மில்லிகிராம் எட்டு (08) கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கிழக்கு கடற்படை கட்டளைக்குச் செந்தமான இலங்கை கடற்படை கப்பல் மஹாவெலி நிறுவனத்தின் கடற்படையினர், சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2025 பெப்ரவரி 12 ஆம் திகதி திருகோணமலை கொட்பே பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் மூன்று கிராம் (03) நூற்று முப்பது (130) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளின் போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார், வவுனியா, மோதர கோவில் வீதி, கிபுலா கால்வாய், மாதம்பிடிய, திருகோணமலை மற்றும் சைனபே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 45 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிலாவத்துறை, மரிச்சிகட்டியில் கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் வில்பத்து கல்ஆறு வீதித் தடையில் மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடமும், திருகோணமலை கொட்பே பகுதியில் கைது செய்யப்பட்ட இருவருடன் ஐஸ் போதைப்பொருள் சைனபே பொலிஸாரிடமும், ஐஸ் போதைப்பொருளுடன் மோதர, கிபுலா கால்வாய், கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பிளூமெண்டல் மற்றும் மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.