நடவடிக்கை செய்தி

சுமார் 2800 மில்லியன் ரூபா பெறுமதியான 121 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் தென் கடலில் வைத்து கடற்படையினரால் கைது

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதியில் இருந்து சுமார் 413 கடல் மைல் (சுமார் 764 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 111 கிலோ 606 கிராம் (பொதி எடையுடன்) ஹெரோயின் மற்றும் 10 கிலோ 254 கிராம் ஹஷிஸ் (பொதி எடையுடன்) போதைப்பொருளுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு சந்தேக நபர்கள் 2023 மே 13 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு மூலம் கைது செய்யப்பட்டது. குறித்த போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (2023 மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கைப்பற்றப்பட்ட போதைபொருட்களை நேரில் பார்வையிட்டார்.

19 May 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் காலி, அக்குரஸ்ஸ, கொடபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பிரதேசங்களுக்கு கடந்த 2023 மே மாதம் 14 ஆம் திகதி முதல் கடற்படை நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளதுடன் தற்போது, நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

15 May 2023

சீரற்ற காலநிலையினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

தீவை பாதித்துள்ள மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 மே 14 ஆம் திகதி தெற்கு மாகாணத்தில் சில பகுதிகளில் இலங்கை கடற்படையினர் நிவாரணக் குழுக்களை நிலைநிறுத்தியுள்ளனர்.

15 May 2023

பேருவளை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து இன்று காலை (2023 மே 14) மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீற்றர்) தொலைவில், இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணத்தினால் ஏற்பட்ட கடல் நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்த மீன்பிடிப்படகொன்றில் இருந்த ஆறு (06) மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான CG 208 படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

14 May 2023

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 மே மாதம் 11 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்று கைது செய்யப்பட்டது.

12 May 2023

மன்னார் கடல் பகுதியில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் 10 வர்த்தக வெடிபொருள் குச்சிகளுடன் 07 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 மே மாதம் 8 ஆம் திகதி மன்னார் வங்காலே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்த ஏழு (07) பேர்; வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் பத்து (10) குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டன.

09 May 2023

யாழ்ப்பாணத்தில் 85 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தென் கரையோரப் பகுதியில் இன்று (மே 08, 2023) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 85 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

09 May 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 20 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் கோக்கிளாய் கடற்பகுதியில் 2023 மே மாதம் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபது (20) பேருடன் 08 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

06 May 2023

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேருடன் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது.

06 May 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, கொரல்கோவ் கடல் பகுதியில் 2023 மே 02 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

04 May 2023