நடவடிக்கை செய்தி
மின் விளக்குகளை பயன்படுத்தி வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மின்சார விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் (02), இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
02 May 2023
யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் இருந்து 50 வர்த்தக வெடிபொருள் குச்சிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன
யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
01 May 2023
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 836 கிலோகிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் இன்று (2023 மே 01) அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள், ஒரு டிங்கி படகு (01) மற்றும் இரு நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
01 May 2023
ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாவத்துறையில் கைது
இலங்கை கடற்படையினரும் மன்னார் பொலிஸாரும் இணைந்து 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை சிலாவத்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 893 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
28 Apr 2023
கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பிலும் கிண்ணியா பாலத்தை சூழவுள்ள பகுதியிலும் மின் விளக்குகள் மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நபர்களை அடையாளம் காண விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை இலங்கை கடற்படையினர் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டனர். குறித்த நடவடிக்கையின் போது இருபத்தி இரண்டு (22) சந்தேகநபர்கள் மற்றும் எட்டு (08) டிங்கி படகுகள், பல சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
28 Apr 2023
வடகடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 10 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் குதிரிப்பு, வெத்தலக்கேணி மற்றும் நாகர்கோவில் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர், சுழியோடி உபகரனங்கள், சுமார் 1040 கடல் அட்டைகள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
27 Apr 2023
26 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் பலாலி அந்தோனிபுரம் கடற்கரைப் பகுதியில் 2023 ஏப்ரல் 23 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 26 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
24 Apr 2023
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த 23 இலங்கையர்கள் வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாம் நாட்டுக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலொன்று கடந்த 2022 நவம்பர் 07 ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலம் உடனடியாக காப்பாற்றப்பட்ட பின் வியட்நாமில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 151 இலங்கையர்கள் 2022 டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன், தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருபத்திமூன்று (23) இலங்கையர்கள் 2023 ஏப்ரல் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தனர்.
21 Apr 2023
உதயபுரம் கடற்கரையில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 25 குச்சிகள் கடற்படையினர் மீட்டுள்ளனர்
யாழ்ப்பாணம், உதயபுரம் கரையோரப் பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 25 குச்சிகள் கைப்பற்றப்பட்டன.
20 Apr 2023
மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு திருகோணமலை, நயாறு மற்றும் அலம்பில் கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள விசேட நடவடிக்கையின் போது மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எட்டு பேர் (08) நான்கு 04) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
19 Apr 2023