நடவடிக்கை செய்தி

மஹகநதராவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

தீவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தாங்கல மற்றும் மஹகநதராவ அலுத்பாரகம பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மூன்று (03) கடற்படை பேரிடர் நிவாரண குழுக்கள் நிறுத்தப்படுவதாகவும், தற்போது அந்த நிவாரண குழுக்கள் புத்தாங்கல மற்றும் மககநதராவ அலுத்பாரகம பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

23 Jan 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த 1289 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கீரமுந்தலம பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி உச்சமுனை, கீரமுந்தலம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முட்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தொன்பது (1289) கிலோகிராம் பீடி இலைகளுடன், (ஈரமான எடை) ஒரு டிங்கி படகு (01), இழுவைப் படகுகள் இரண்டு (02), உழவு இயந்திரங்கள் இரண்டு (02) மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

21 Jan 2025

கல்பிட்டியில் கடற்படையினரால் 2137 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் டிங்கி மூலம் கொண்டு செல்லப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சுமார் இரண்டாயிரத்து முப்பத்தேழு (2137) ஹேக் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

15 Jan 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 864 கிலோவுக்கும் அதிகமான பிடி இலைகள் நீர்கொழும்பு தடாகத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு தடாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற, சுமார் எண்ணூற்று அறுபத்து நான்கு (864) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

15 Jan 2025

மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2025 ஜனவரி 07 முதல் 09 வரை மன்னார் ஒலுதுடுவாய், மாந்தை, வங்காலை, சிலாவத்துறை மற்றும் புத்தளம் தலுவ ஆகிய கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி எட்டு (28) நபர்களுடன் ஏழு (07) டிங்கி படகுகள் மற்றும் இழுவைப் படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

10 Jan 2025

ஆனமடுவ, உப்பலவத்தை மஹா ஏரியின் வான்கதவை திருத்துவதற்கு கடற்படை சுழியோடி குழுவின் உதவி

புத்தளம் ஆனமடுவ, உப்பலவத்தை மஹா ஏரியின் வான்கதவு செயலிழந்து இருந்ததை சீர்செய்து மீட்டெடுக்க 2025 ஜனவரி 07 அன்று, கடற்படையின் சுழியோடி குழுவின் உதவியை வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.

09 Jan 2025

2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 28158 மில்லியன் ரூபாவிற்கு மேல் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைமருந்துகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இந் நாட்டின் சட்ட அமுலாக்க முகவர் மற்றும் பிராந்திய கடல்சார் பங்குதாரர்களுடன் இணைந்து கடந்த (2024) ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் போதைமருந்து கடத்தல், சட்டவிரோத பொருட்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 407 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுடன், ரூ.28,158 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் மற்றும் போதைமருந்துகள் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த பெரிய அளவிலான பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றபட்டது.

06 Jan 2025

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கம் கற்பிட்டி, பத்தலன்கடுவயில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 ஜனவரி 04) கற்பிட்டி பத்தலன்கடுவ தீவிற்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், கடற்படையினரால் அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு முயற்சித்த (11) கிலோ (300) கிராம் தங்கம், ஒரு (01) டிங்கி படகுடன் 03 சந்தேகநபர்கள் கடற்டையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Jan 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் வைத்து கைது

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து இன்று (2024 டிசம்பர் 08) யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்டு (08) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Dec 2024

சுமார் 18 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா வடகடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் 2024 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 45 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கைது செய்யப்பட்டது.

06 Dec 2024