கலாநிதி நிஹால் ஜனசேன ஞாபகார்த்த பாய்மரப் படகுப் போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள் கிடைத்தன

கலாநிதி நிஹால் ஜனசேன ஞாபகார்த்த கிண்ண பாய்மரப்போட்டி 2025 ஜனவரி 01 ஆம் திகதி வெலிகம, மிரிஸ்ஸ கப்பரதோட்டை கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அங்கு கடற்படை படகோட்டம் பல வெற்றிகளைப் பெற்ற்றது.

இதன்படி, கடற்படை பாய்மரக் அணி உட்பட நாடளாவிய ரீதியில் பல பாய்மரச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 70 வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், 'GP 14' நிகழ்வில் முதலாம் இடத்தை கெப்டன் மாலுமி கேசிடி சொய்சா மற்றும் பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர் டி.டி.எஸ். பெரேரா ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன், இந்நிகழ்வில் கடற்படை வீரர் ஏஎம்ஜேபி அத்தநாயக்க மற்றும் கடற்படை வீரர் ஏஎஸ்கே டி சொய்சா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், கடற்படை வீரர் ஜேஎச்எம்பிஐ ஜயபத்ம மற்றும் கடற்படை ஜேஎஸ்ஐகே சேனாரத்ன மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

‘Enterprise’ போட்டியில் கடற்படை வீரர் கேஎஸ்கேடி சில்வா மற்றும் கடற்படை வீரர் யுஜிடி மதுசங்க ஆகியோர் முதலிடத்தையும், லெப்டினன்ட் பிஎஸ்எஸ் கோமஸ் மற்றும் கடற்படை வீரர் ஏ.ஜி.பி.அசங்க ஆகியோர் இரண்டாம் இடத்தையும், கப்டன் எல்.ஏ.சி.குணதிலக்க மற்றும் கடற்படை வீராங்கனை எம்டிஎம் சுபாஷினி ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும், இப் போட்டியின் 'ILCA 6' நிகழ்வில் தலைமை கடற்படை வீரர் பிடிடிஎஸ் ராஜபக்ஷ மூன்றாம் இடத்தையும், பெற்றுக்கொண்டதுடன், 'ILCA 7' நிகழ்வில் கடற்படை வீரர் ஜிபிபி கருணாரத்ன முதலாம் இடத்தையும், கடற்படை வீரர் யுடி ராஜபக்ஷ இரண்டாம் இடத்தையும், கடற்படை வீரர் எஸ்பிபிஎன் குமார மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.

மேலும், 'Wind Surfing' நிகழ்வில், கடற்படை வீரர் டிஏஎஸ் வீரதுங்க முதலாம் இடத்தையும், கடற்படை வீரர் கேபிபி குணவர்தன இரண்டாம் இடத்தையும் பெற்றனர், இதன்மூலம் கடற்படை படகுப்போட்டி அணியால் பல வெற்றிகளைப் பெற முடிந்தது.