பாதுகாப்புச் சேவை கடற்கரை கரப்பந்தாட்ட மகளிர் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது
13வது பாதுகாப்புச் சேவைகள் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் 2025 மார்ச் 12 முதல் 14 வரை கட்டுநாயக்க, இலங்கை விமானப்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரை கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை வெற்றிப்பெற்றது.
அதன்படி, இலங்கை கடற்படை மகளிர் கடற்கரை கரப்பந்தாட்ட அணியானது போட்டியின் ஆரம்ப சுற்றுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதுடன், முதல் போட்டியில் இலங்கை விமானப்படை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இரண்டாவது போட்டியில் இலங்கை இராணுவ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை மகளிர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இலங்கை விமானப்படை அணியை தோற்கடித்து 13வது பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கரப்பந்தாட்ட மகளிர் சம்பியன்ஷிப் தொடரை இலங்கை கடற்படை மகளிர் அணி வென்றது.