2024/2025 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2024/2025 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி போட்டித் தொடர் 2024 டிசம்பர் 28 முதல் 2025 மார்ச் 14 வரை நடைபெற்றதுடன், குறித்த போட்டித் தொடரில் 2025 மார்ச் 14ஆம் திகதி அன்று, CR&FC விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 61-05 என்ற கணக்கில் வீழ்த்தி, கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.

போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தை வெளிப்படுத்திய கடற்படை மகளிர் ரக்பி அணி, முதல் சுற்றில் CR&FC அணியை 44-15 என்ற கணக்கிலும், இராணுவ அணியை 32-07 என்ற கணக்கிலும் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது, இரண்டாவது சுற்றில் இராணுவ அணியை 27-24 என்ற கணக்கிலும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அங்கு, கடற்படை அணி, CR&FC அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் CR&FC அணியை 61-05 என்ற கணக்கில் தோற்கடித்து 2024/25 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.

இறுதிப் போட்டியில், சிறப்பாக விளையாடிய பெண் மாலுமி ஆர்.எஸ்.எச்.குமாரி 06 முயற்சிகலும், பெண் மாலுமி கே.பி.டி.பி. சத்சரணி 02 முயற்சிகலும், பெண் மாலுமி டபிள்யூ.டி.எஸ். பிரபுமாலி மற்றும் பெண் மாலுமி எம்.டி.ஆர். குமுதுமாலி ஆகியோர் 01 முயற்சிகளையும், பெண் மாலுமி ஏ.எஸ்.எச். மதுமாலி 01 முயற்சி மற்றும் மாற்றத்தையும், பெண் மாலுமி டபிள்யூ.எஸ்.டி.எஸ் விஜேதிலக 02 முயற்சிகளை பெற்று, கடற்படையின் புள்ளிப்பலகையில் 61 வெற்றிப் புள்ளிகளாக உயர்த்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்தனர்.

மேலும், இந்தப் போட்டியில், கடற்படை மகளிர் மாலுமி ஆர்.எஸ்.எச். ஹேமகுமாரி 09 முயற்சிகளை (45 புள்ளிகள்) பெற்று, போட்டியின் அதிக புள்ளிகளை பெற்ற வீரருக்கான கோப்பையை வென்றார்.

மேலும், இலங்கை கடற்படை ரக்பி அணியின் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட கடற்படை வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.