விளையாட்டு செய்திகள்
கட்டளைகளுக்கு இடையேயான மேசைப்பந்து போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது

கட்டளைகளுக்கு இடையேயான மேசைப்பந்து போட்டித்தொடர் 2023 ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் உள்ள கொமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றதுடன் வடக்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தை வென்றது.
25 Jun 2023
தாய்நாட்டிற்காக தங்கப் பதக்கங்களை வென்ற கடற்படை விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன

ஜப்பான் மற்றும் டுபாயில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற கடற்படை வீராங்கணை கயந்திகா அபேரத்ன மற்றும் கடற்படை பரா தடகள வீர்ர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம்.சுபசிங்க ஆகியோர் தங்களின் பதக்கங்கள் மற்றும் விருதுகளுடன், இன்று (2023 ஜூன் 20) இலங்கை கடற்படை விளையாட்டு சபையின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர்களது செயற்பாடுகளை பாராட்டிய வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இரு விளையாட்டு வீரர்களுக்கும் பணப்பரிசுகளை வழங்கி அவர்களின் விளையாட்டு வாழ்க்கையை தொடர ஊக்குவித்தார்.
20 Jun 2023
'கடற்படைத் தளபதி கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023' தெற்கு மண்டலம் வென்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2023 ஜூன் மாதம் 09 ஆம் திகதி வெலிசர கடற்படை வளாக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 'கடற்படைத் தளபதி கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023' (Commander of the Navy’s Cup) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக நடைபெற்றதுடன் அதன் வெற்றி கிண்ணம் தெற்கு மண்டலம் வென்றதுடன் இரண்டாம் இடம் வடக்கு மண்டலம் பெற்றுள்ளது.
10 Jun 2023
12வது பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் வாட்டர் போலோ போட்டித்தொடரில் முதலாம் இடம் மற்றும் இரண்டாம் இடம் கடற்படை நீச்சல் அணிகள் வென்றன.

2023 ஜூன் மாதம் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தின் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற 12 ஆவது பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் வாட்டர் போலோ போட்டித்தொடரில், கடற்படை மகளிர் நீச்சல் குழு நீச்சல் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், கடற்படையின் ஆண்கள் நீச்சல் குழு இரண்டாம் இடத்தை வென்றது.
10 Jun 2023
12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்து போட்டித்தொடரில் மகளிர் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட 12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்துப் போட்டித்தொடர் 2023 மே 03 முதல் 22 வரை கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை மகளிர் கால்பந்து அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் கடற்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை வென்றது.
24 May 2023
இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாக அதிகாரத்தை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு வருட காலப்பகுதிக்கு இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாகப் பணிகள் இலங்கை இராணுவத்திடம் இருந்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2023 மே 18 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
20 May 2023
ஜப்பானில் நடைபெற்ற தடகள போட்டி தொடரொன்றில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜப்பானில் நடைபெறுகின்ற 39வது சிஷோகா மற்றும் 10 வது கினாமி மவிதகா நினைவு தடகள போட்டித்தொடர் – 2023 (39th Shizuoka Meet & 10th Kinami Machitaka Memorial Athletics Meet – 2023) இல் 2023 மே 03 அன்று நடைபெற்ற 800m பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படையின் கடற்படை விராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றார்.
05 May 2023
“NIPPON PAINT KABADDI CHAMPIONSHIP – 2023” மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2023 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பிலியந்தலை சோமவீர ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் நடைபெற்ற NIPPON PAINT KABADDI CHAMPIONSHIP – 2023 Super League போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த்துடன் கடற்படை மகளிர் கபடி அணி அதன் மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்றது.
02 May 2023
‘Navy Cup Sailing Regatta - 2023’ காலி முகத்திடலில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

‘Navy Cup Sailing Regatta - 2023’ பாய்மர படகுகள் போட்டித்தொடர் 2023 ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 2023 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
24 Apr 2023
பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து பெண்கள் போட்டியில் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை வென்றது

பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் - 2022/23, யில் பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து போட்டித்தொடர் 2023 ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது, இதில் கடற்படை மகளிர் கடற்கரை கைப்பந்து அணி இரண்டாம் இடத்தை வென்றது.
23 Apr 2023