Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

தீவிற்கு வந்தடைந்த ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், தனது செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் தீவிலிருந்து புறப்படுகிறது.

06 May 2026

இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 2026 மே 04 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்ததுடன். அக்கப்பல் இன்று (2026 மே 06 ஆம் திகதி) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளின்படி கொழும்பு துறைமுகத்தில் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

தீவிற்கு வந்தடைந்த ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையேயான உத்தியோகபூர்வ சந்திப்பு, கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது. தீவில் நீர்மூழ்கிக் கப்பல் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்விழும் அதன் குழுவினர் பங்கேற்றனர்.

மேலும், இலங்கை கடற்படை வீரர்களுக்கு நீர்மூழ்கிக் கப்பலைக் காணும் வாய்ப்பு கிடைத்ததுடன், நீர்மூழ்கிக் கப்பலானது தீவில் தங்கியிருந்தபோது நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினரும் நாட்டின் கவர்ச்சிகரமான இடங்களைப் பார்வையிட்டனர்.

Accessibility Tools