Sri Lanka Navy – Official Logo

கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் கடற்படையால் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன

13 May 2026

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2026 மே 11 அன்று திறந்து வைக்கப்பட்டன.

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிதிப் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட, கடற்படை இதுவரை ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து (1155) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது.

அதன்படி, மாணவர்களுக்காக திறந்து வைக்கப்பட்ட இந்த இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் ஏராளமான மாணவர்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.

Accessibility Tools