Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் புத்தளத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

06 May 2026

2026 மே 05 ஆம் திகதி புத்தளத்தின் பெரியபாடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொண்டுச் செல்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினெட்டு (618) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபண்ணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புத்தளத்தின் பெரியபாடு கடலோரப் பகுதியில் 2026 மே 05 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான கெப் வண்டி (01) பரிசோதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொண்டுச் செல்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த, இருபது (20) பைகளில் பொதிச்செய்யப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினெட்டு (618) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் அந்த கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையால் கைது கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், புத்தளம் கொட்டந்த்தீவு பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 46 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபர்கள், கெப் வண்டி மற்றும் பீடி இலைகள் ஆகியவை புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Accessibility Tools